வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு.
முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, இன்று (ஜன.6) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். www.dge.tn.gov.in தளத்தில் டவுன்லோடு செய்யப்படும் விண்ணப்பத்தை நிரப்பி தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்க வேண்டும்.